வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பில்லனகுப்பம் கிராம சபைக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி ஆட்சியர் பங்கேற்றார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் பில்லனகுப்பம் கிராமத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர்ஜெயசந்திர பானு ரெட்டி பேசியதாவது:
அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க வீடுகளை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வெளியில் செல்லவேண்டும். பொதுமக்களின் கோரிக்கைகள் தகுதியின் அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு ஆட்சியர் பேசினார்.
கூட்டத்தில், பொது நிதியி லிருந்து மேற்கொண்ட செலவின அறிக்கை பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. ஊராட்சியில் மேற் கொள்ள உள்ள வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது.
வடக்கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள், ஊரக வேலை உறுதி திட்டத்தில் குளங்கள், ஏரிகள் புனரமைத்தல், தடுப்பணை கட்டுதல், மரக்கன்று நடுதல் குறித்து ஆலோசனை மேற் கொள்ளப்பட்டது.
கூட்டத்தில், திட்ட இயக்குநர் மலர்விழி, முன்னாள் எம்எல்ஏ முருகன், வேளாண்மை இணை இயக்குநர் ராஜேந்திரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) வெங்கடாசலம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பையாஸ், சென்னகிருஷ்ணன், ஹேமலதா, ஒன்றியக் குழு தலைவர் சரோஜினி பரசுராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago