புரட்டாசி 3-வது சனிக்கிழமை - பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை :

By செய்திப்பிரிவு

புராட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக நடு சனிக்கிழமை பெரும்பாலான வீடுகளில் வழிபாடு நடைபெறும். நேற்று காலை கணவாய்ப் பட்டி வெங்கட்ரமண சுவாமி கோயில், பொன்மலை சீனிவாச பெருமாள் கோயில், பாளேகுளி அனுமந்தராய சுவாமி கோயில், கிருஷ்ணகிரி காட்டு வீர ஆஞ்சநேயர் பெருமாள் கோயில், மலையப்ப சீனிவாச பெருமாள் கோயில் உட்பட அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

கரோனா தடுப்பு விதிமுறைகள் அமலில் உள்ளதால் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

இதனால், கோயில்களில் வெளியே நின்றபடி பக்தர்கள் பெருமாளை வழிப்பட்டனர்.இதனிடையே, கிருஷ்ணகிரி கணவாய்ப்பட்டி கோயிலுக்கு வந்த பக்தர்களை 2 கிமீ தூரத்தில் போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

இதுகுறித்து பக்தர்கள் சிலர் கூறும்போது, கரோனா பரிசோதனை, தடுப்பூசி சான்றிதழ் உள்ளிட்ட கட்டுப் பாடுகளுடன் பக்தர்களை கோயில்களில் அனுமதிக்க வேண்டும், என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE