தமிழக பொதுப்பணி மற்றும் நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் துரைமுருகன் அண்மையில் போக்குவரத்துக் கழக ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை தரக்குறைவாக பேசியதாகக் கூறி, அதைக் கண்டித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் பெரம்பலூரில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
துறைமங்கலத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago