தூத்துக்குடி காமராஜ் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க 39-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
ஆண்களுக்கு 7.5 கி.மீ. தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ. தூரமும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. போட்டிகளை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். ஆண்கள் பிரிவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட 586 பேர் பங்கேற்றனர். பெண்கள் பிரிவில் 268 பேர் பங்கேற்றனர்.
ஆண்கள் பிரிவில் செயின்ட் ஜான்ஸ் உடற்கல்வியியல் கல்லூரி மாணவர் எம்.பசுபதி முதலிடம் பிடித்து 3 கிராம தங்க நாணயம் பரிசாக பெற்றார். 2-வது இடம் பிடித்த கோவை ரத்தினம் கல்லூரி மாணவர் எஸ்.வேல்முருகனுக்கு 2 கிராம் தங்க நாணயமும், 3-வது இடம் பிடித்த சென்னை லயோலா கல்லூரி மாணவர் எம்.அஜித்துக்கு ஒரு கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டது.
பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த புதூர் நாடார் உயர்நிலைப்பள்ளி மாணவி வி.கோகிலாவுக்கு 3 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது. 2-வது இடம் பெற்ற தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி கல்லூரி மாணவி எம்.ஜெயபாரதிக்கு 2 கிராம் தங்க நாணயமும், 3-வது இடம் பெற்ற விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.ராதிகாவுக்கு ஒரு கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கல்லூரி பொருளாளர் முத்துச்செல்வம், கல்லூரி முதல்வர் து.நாகராஜன், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் ரமேஷ்குமார், செயலாளர் தி.விமல்ராஜ், பொருளாளர் ஆ.தேவராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago