தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை யொட்டியபகுதிகளில் நேற்று முன்தினம் லேசான மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் கருப்பாநதி அணையில் 10 மி.மீ., தென்காசியில் 9.80, ஆய்க்குடியில் 8, அடவிநயினார் அணையில் 3, குண்டாறு அணை, சிவகிரியில் தலா 2 மி.மீ. மழை பதிவானது. நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
குண்டாறு அணை நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் 62.90 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 57.50 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 52.82 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 125 அடியாகவும் இருந்தது.
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நின்று வெயில் அடித்து வந்த நிலையில், நேற்றுமுன்தினம் மாலையில் இருந்து மிதமான மழை பெய்யத் தொடங்கியது. நேற்று பகலிலும் விட்டுவிட்டு மழை பெய்தது. அதிகபட்சமாக குருந்தன்கோட்டில் 26 மிமீ மழை பெய்திருந்தது. பேச்சிப்பாறையில் 44 அடி நீர்மட்டம் உள்ள நிலையில், அணைக்கு 519 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 850 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணையில் 66 அடி தண்ணீர் உள்ள நிலையில், 535 கனஅடி தண்ணீர் அணைக்கு வருகிறது. 350 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மழையால் நேற்று மாவட்டம் முழுவதும் குளிரான தட்பவெப்பம் நிலவியது.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago