மாணவர்கள், பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால், சம்பந்தப்பட்ட கல்வி மற்றும் தொழில் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுதொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பு பொது சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளின்படி, தொழில் நிறுவனங்கள், பெட்டிக்கடைகள், ஜவுளி நிறுவனங்கள், உப்பளத் தொழிலாளர்கள், துறைமுக பணியாளர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், அரசு,அரசு சார்பு நிறுவனங்கள், சிறு,குறு வணிக நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள், கரோனா தடுப்பூசியை குறைந்த பட்சம் ஒரு தவணையாவது செலுத்தியிருக்க வேண்டும். இதுகுறித்து கண்காணிக்க துறை அலுவலர்களைக் கொண்ட வட்டார அளவிலான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் தினமும் நிறுவனங்களை ஆய்வு செய்து குறைந்தபட்சம் ஒரு தவணையாவது கரோனா தடுப்பூசி செலுத்தாத மாணவர்கள், பணியாளர்கள் கொண்ட கல்லூரி, பள்ளிகள், நிறுவனங்கள் மீது, தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939-ன் படி நடவடிக்கை எடுப்பர். இந்த நடைமுறை நாளை (4-ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது, என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago