வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பாதிப்புகளை தவிர்க் கவும், இழப்புகளை தவிர்க்கவும் பேரிடர் மேலாண்மைக் கான முன் னேற்பாடு பணிகள் குறித்த கூட்டம் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு அரசின் முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ் தலைமை வகித்தார்.
ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பேசியதாவது:
பேரிடர் காலங்களில் மின் வெட்டு, சாலைகளில் மரங்கள் விழும் போது, மீட்பு பணிகளை துரிதமாக மேற் கொள்ள வேண்டும். மாவட்டத்தில் 35 இடங்கள் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன.
இதற்காக 47 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பேரிடர் காலத்தில் சேதங்களை தவிர்க்க, 2,994 பேருக்கு முதற்கட்ட பயிற்சி, ஒத்திகை அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மழைநீர் வடிகால் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இதில் 90 சதவீதம் நிறை வடைந்துள்ளது. மீதம் உள்ள 10 சதவீத பணிகள் ஒரு வாரத்தில் முடிக்கப்படும் என்றார். இதனைத் தொடர்ந்து தேவசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண மையத்தில் உள்ள அடிப்படை வசதிகளை பார்வையிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago