ரத்த தானம் வழங்கிய அமைப்புகளுக்கு பாராட்டு :

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர், தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரைச் சாலையில் நேரிட்ட விபத்துகளில் காயமடைவோர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவு, விபத்து சிகிச்சைப் பிரிவுகளில் ரத்தத்தின் தேவை அதிகரித்தது. இதையடுத்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கியுடன் இணைந்து, மாவட்டம் முழுவதும் ரத்த தான முகாம்களை நடத்தின.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மட்டும் 760 யூனிட் ரத்தம், மருத்துவமனைக்கு தானம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் 19 அமைப்புகள் சார்பிலும் ரத்த தான முகாம்கள் நடைபெற்றன.

பாராட்டுச் சான்றிதழ்

இந்நிலையில், அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சார்பில், தேசிய தன்னார்வ ரத்த தான நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதில், அதிக ரத்த தானம் செய்த ஜனநாயக வாலிபர் சங்கத்தைப் பாராட்டி, மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெ.முத்துக்குமாரன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். சங்கத்தின் மாநில துணைச் செயலர் நந்தன் மற்றும் நிர்வாகிகள் சான்றிதழைப் பெற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து, ரத்த தான முகாம்கள் நடத்திய 19 அமைப்புகளுக்கும், மருத்துவமனை நிர்வாகம் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியது. இந்த நிகழ்ச்சியில், மருத்துவமனைக் கண்காணிப்பாளர் நமச்சிவாயம், நிலைய மருத்துவ அலுவலர் அனுபமா, துறைத் தலைவர் ரவி, துணைமருத்துவ அலுவலர் (ரத்த வங்கி) கந்தன் கருணை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்