கோட்டக்குப்பம் அருகே ரூ. 11 லட்சம் பறிமுதல் :

By செய்திப்பிரிவு

கோட்டக்குப்பம் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்ற ரூ. 11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

உள்ளாட்சித் தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட் டத்தில் அமைக்கப்பட்டுள்ள 18 சிறப்பு பறக்கும் படையினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணி மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கோட்டக் குப்பத்தை அடுத்த பெரிய முதலி யார் சாவடி கலால் சோதனைச் சாவடி அருகே நேற்று காலை தேர்தல் பறக்கும் படை அலுவ லர் பாலசுப்பிரமணியன் தலை மையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ரூ. 11 லட்சம் எடுத்துச் செல்வது தெரியவந்தது.இதையடுத்து காரில் வந்தவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் மரக் காணம் முருக்கேரி கிராமத்தைச் சேர்ந்த தவமணி (32) என்பது தெரியவந்தது. அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ. 11 லட்சத்தை பறக்கும் படைஅதிகாரிகள் பறிமுதல் செய் தனர்.

பறிமுதல் செய்த பணத்தை வானூர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்