திண்டுக்கல், சிவகங்கையில் இரவு முழுவதும் கன மழை : அதிகபட்சமாக நத்தத்தில் 107 மி.மீ. பதிவு

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் கன மழை பெய்தது. அதிகபட்சமாக நத்தத்தில் 107 மில்லி மீட்டர் மழை பதிவானது.

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு திடீரென மழை பெய்யத் தொடங்கியது. மாவட்டத்தின் பல பகுதிகளில் இடைவிடாமல் தொடர்ந்து பெய்ததால் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. திண்டுக்கல் தெய்வசிகாமணிபுரம் பகுதியில் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. மேட்டுப்பட்டி பகுதியில் அதிகாலை வரை மின் தடை ஏற்பட்டதால் மக்கள் சிரமத்துக்குள்ளாகினர். நேற்று காலை வரை மழை தொடர்ந்தது. மாவட்டத்தில் பெய்த மழையளவு (மி.மீ.ல்) திண்டுக்கல்- 78.8, வேடசந்தூர்- 73, காமாட்சிபுரம்- 97.3, நத்தம் -107, கொடைக்கானல்-40.1 மி.மீ. கன மழை பதிவானது. மாவட்டத்தில் சராசரியாக 56.44 மி.மீ. மழை பதிவானது.

சிவகங்கை

சிவகங்கையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் நேற்று காலை 7 மணி வரை விட்டு விட்டு மழை பெய்தது.

உழவர் சந்தை பகுதியில் இருந்த வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இந்திரா நகரில் தாழ்வான தெருக்களில் வீடுக ளுக்குள் மழைநீர் புகுந்தது. அல்லூர், பனங்காடி, சோழபுரம், வாணியங்குடி உள்ளிட்ட பகுதிகளில் விளைநிலங்களில் வெள்ளநீர் சூழ்ந்தது.

சிங்கம்புணரியில் அதிகபட்சமாக 102 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும் காளையார்கோவிலில் 45.40 மி.மீ., திருப்பத்தூர், காரைக்குடி தலா 63 மி.மீ., தேவகோட்டை 49.40 மி.மீ., திருப்புவனம் 47.80 மி.மீ., இளையான்குடி 24.40 மி.மீ., மானாமதுரை 16 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. காளையார் கோவில் ஒன்றியம் ஆனமாவலி, திருப்பத்தூர் அருகே கம்பனூர் ஆகிய இடங்களில் 2 வீடுகள் சேதமடைந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்