``பட்டறைகளில் அரிவாள் வாங்குபவர்கள் பற்றிய விவரங்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என, தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, அவர் மேலும்கூறியதாவது: அரிவாள் புழக்கத்தை தடுக்கும் வகையில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 8 கொல்லர்ப் பட்டறைகள் உள்ளன. அவற்றின் உரிமையாளர்களை அழைத்துபேசியுள்ளோம். பட்டறைகளில் ஆயுதங்கள் செய்ய வருபவர்களின் முழு விவரங்களையும் பதிவுசெய்ய வேண்டும். அவர்கள் மீது ஏதேனும் சந்தேகம் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும். பட்டறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். கேமரா பொருத்த வசதிஇல்லாதவர்களின் கடை அருகே காவல் துறை சார்பில் கேமரா பொருத்தப்படும்.
அரசு வகுத்துள்ள கரோனாவிதிமுறைகளின் படி, கட்டுப்பாடுகளுடன், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில்தசரா திருவிழா நடைபெறும்.கொடியேற்றம், சூரசம்ஹாரம்,வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை. மற்ற நாட்களில் உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்கள் தரிசனம் செய்யலாம். தசரா திருவிழாவை முன்னிட்டு 1,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவ்வாறு எஸ்பி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago