சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா :

நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாளை முன்னிட்டு நாகர்கோவில் வேப்பமூட்டில் உள்ள காமராஜர் சிலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிவாஜி கணேசன் படத்துக்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் காங்கிரஸார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாநகர தலைவர் அலெக்ஸ் உட்பட பலர் பங்கேற்றனர். நாகர்கோவில் மணிமேடை சந்திப்பில் காங்கிரஸ் கலைப்பிரிவு மாவட்ட தலைவர் ராம்குமார் தலைமையில் நலஉதவிகள் வழங்கப்பட்டன. அகில இந்திய சிவாஜி மன்றம் சார்பில் நாகர்கோவில் இந்து கல்லூரி அருகே அபயகேந்திரா முதியோர் இல்லத்தில் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. சிவாஜி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அகில இந்திய சிவாஜி மன்ற மாவட்ட தலைவர் பெஞ்சமின் போஸ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் அசோக் பத்மராஜ் கலந்துகொண்டார். முதியோர்களுக்கு உணவு, வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன. மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் ஸ்டாலின் ராஜூ, துணை ஆளுநர் பால்டுவின் புரூஸ், அகில இந்திய சிவாஜி மன்ற செயலாளர் மார்டின் ஜேம்ஸ் மற்றும் திரளானோர் கலந்துகொண்டனர். திருநெல்வேலயில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். கலைப்பிரிவு தலைவர் கஸ்பர் ராஜ், ஐஎன்டியுசி நிர்வாகி கண்ணன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். சிவாஜி கணேசன் உருவப்படத்துக்கு முன்னாள் மத்திய இணையமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், மாவட்ட துணைத் தலைவர் உதயகுமார், பொதுச்செயலாளர் சொக்கலிங்ககுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்