உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடிகளில் - அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் : தேர்தல் பார்வையாளர் ஞானசேகரன் உத்தரவு

By செய்திப்பிரிவு

தி.மலை மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என தேர்தல் பார்வையாளர் அ.ஞான சேகரன் உத்தரவிட்டுள்ளார்.

தி.மலை மாவட்டத்தில் காலியாக உள்ள 66 உள்ளாட்சி பதவிகளுக்கு வரும் 9-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. இதை யடுத்து, வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இதில், 5 ஊராட்சி மன்ற தலைவர் பதவி உட்பட 31 பதவிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும், 3 ஒன்றியக் குழு உறுப்பினர் மற்றும் 6 ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் 26 வார்டு உறுப்பினர் பதவி என மொத்தம் 35 பதவிகளுக்கு வரும் 9-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 87 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆய்வுக் கூட்டம் திருவண்ணா மலை நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் நேற்று பிற்பக லில் நடைபெற்றது.

தேர்தல் பார்வையாளர் அ.ஞானசேகரன் தலைமை வகித்தார். அப்போது, உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். பதற்றமான வாக்குச்சாவடிகள் செய்ய வேண்டிய பணிகளை எடுத்துரைத்தார். மேலும் அவர், வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், தேர்தல் அமைதியாக நடைபெறுவதற்கு தேவையான பாதுகாப்புகளை பலப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஆய்வின்போது ஆட்சியர் பா.முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார், கோட்டாட்சியர் வெற்றிவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்