சீராக குடிநீர் விநியோகிக்கக்கோரி திருப்பூரில் இரு இடங்களில் மக்கள்காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 12-வது வார்டு முருங்கப்பாளையம் பகுதியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள்வாழ்ந்து வருகின்றனர். கடந்த 8 மாதங்களாக 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்வதைக் கண்டித்து, அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர்-அவிநாசி சாலையில் குமார் நகர் பேருந்து நிறுத்தத்தில் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, ‘‘8 மாதங்களாக சீரான குடிநீர் விநியோகம் இல்லாததால், பலரும் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மாநகராட்சி ஆணையர்இதில் தலையிட்டு எங்கள் பகுதியின் பல மாத பிரச்சினைக்கு உடனடி தீர்வு ஏற்படுத்தித்தர வேண்டும்’’ என்றனர்.
சுமார் ஒரு மணி நேரம் நடந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து திருப்பூர் வடக்கு போலீஸார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சமரசம் செய்ததைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வீரபாண்டி பகுதியில் சுமார்30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வரும் நிலையில், இந்த பகுதியிலும் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். சாக்கடையை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.
குப்பையை நாள் தவறாது அள்ள வேண்டும் என்பன உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வீரபாண்டி பேருந்து நிறுத்தத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்அப்பகுதிபொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த வீரபாண்டி போலீஸார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago