வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டதால் தர்ணா :

By செய்திப்பிரிவு

விழுப்புரம் அருகே ஈச்சங்குப்பத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அவர்களிடம் வருவாய் கோட்டாட்சியர் ஹரிதாஸ் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவர்கள்அளித்த மனுவில், எங்கள் ஊராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 80 வாக்காளர் பெயர்களை நீக்கம் செய்தும், புதிதாக தகுதியற்ற, வயது வரம்பு இல்லாத மற்றும் எங்கள் ஊராட்சி பகுதிக்கு சம்பந்தமில்லாத புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துள்ளனர் என்று தெரிவித்திருந்தனர்.

இதை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய வருவாய்த் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால் தர்ணா போராட்டத்தை கிராம மக்கள் கைவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்