கரோனா கட்டுப்பாடுகளால் காணொலி மூலம் நடந்து வந்த விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் 19 மாதங்களுக்குப் பின் நேற்று திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் ஆட்சியர் ச.விசாகன் தலைமையில் நடந்தது.
சத்திரப்பட்டி அருகேயுள்ள கருங் குளத்துக்கு வரதமாநதி அணையில் இருந்து தண்ணீர் வழங்கும் திட்டத்தைச் செயல் படுத்த வேண்டும்.
கருங்குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கல் ஊன்றிய பிறகும் அதே இடத்தில் மீண்டும் சிலர் ஆக்கிரமிக்கின்றனர். இதை பொதுப் பணித்துறையினர் கண்காணிக்க வேண்டும், என விவசாயி அழகியண்ணன் கேட்டுக் கொண்டார்.
நூறு நாள் வேலைத் திட்டத்துக்குத் தொழிலாளர்கள் சென்றுவிடுவதால் நாற்று நடவு செய்ய, களை எடுக்க வேலையாட்கள் கிடைப்பதில்லை.
இதனால், விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. நூறு நாள் வேலையில் ஈடுபடும் தொழிலாளர்களை விவசாய வேலை செய்யவும் அனுமதித்தால் விவசாயத்தைக் காப்பாற்ற முடியும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்குப் பதில் அளித்த கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், இது குறித்து அரசுக்குப் பரிந்துரை செய்யலாம். முடிவெடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகள்தான் என்றார். தொடர்ந்து விவசாயிகள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பதில் அளித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago