ஊரக உள்ளாட்சித் தேர்தல் - தூத்துக்குடி மாவட்டத்தில் 14,933 பேர் வாக்களிக்க ஏற்பாடு :

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் சாதாரண தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கெனவே தேர்தல் நடத்தப்பட்ட 28 மாவட்டங்களில் நிரப்பப்படாத பதவியிடங்கள் மற்றும் ஜூன் 2021 மாதம் வரை ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கும் தற்செயல் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள 48 பதவிக்கான தேர்தல் 09.10.21 அன்று நடைபெறுகிறது. இதில் 26 பதவிகளுக்கு மனுதாக்கல் செய்தவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். 6 ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு 16 பேர், 16 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 43 பேர் என மொத்தம் 59 பேர் போட்டியிடுகின்றனர்.

இப்பதவிகளுக்கான வாக்குப்பதிவு 9.10.21 அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. ஊராட்சித் தலைவர் பதவிக்கு 23 வாக்குச்சாவடிகளில் 10,168 பேர், வார்டு உறுப்பினர் பதவிக்கு 15 வாக்குச்சாவடிகளில் 4,765 பேர் என மொத்தம் 14,933 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 38 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட் டுள்ளன. வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவதற்காக 152 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 2 கட்டமாக அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் 3-வது கட்ட பயிற்சி அளிக்கப்படவுள்ளது. வாக்குச்சீட்டுக்களும் அச்சிடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்