கவுரவ விரிவுரையாளர்கள் உட்பட 5 பேருக்கு கரோனா : உதகை அரசு கல்லூரி மூடப்படுவதாக அறிவிப்பு

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றும் வணிகவியல் கவுரவ விரிவுரையாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து கல்லூரியில் பணியாற்றும் 200-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ததில், மேலும் 5 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.எனவே மறு உத்தரவு வரும் வரை கல்லூரி மூடப்படுவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

உதகையில் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் ஓர் ஆசிரியர், மாணவர்கள் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, அப்பள்ளிக்கு நாளை (அக்.1) வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உதகையில் உள்ள ஒரு தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் இரு மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மஞ்சூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் இரு மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், அப்பள்ளிக்கு நாளை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்