கள்ளக்குறிச்சி- தியாகதுருகம் சாலையில் விவசாய விளை நிலத்தில் தனிநபர் ஒருவர் வீட்டு மனை பிரிவு அமைத்து வீடுகள் கட்டி விற்பனை செய்ய ஏற்பாடு செய்து வருகிறார். அந்த இடத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் தனி நபருக்காக கள்ளக்குறிச்சி மின்துறை அதிகாரிகள் 10 -க்கும் மேற்பட்ட மின்கம்பங்களை முறைகேடாக அமைத்து மின்இணைப்பு வழங்கியுள்ளனர் என கடந்த 23.06.2021-ல் தமிழ்நாடு மின் வாரிய லஞ்ச ஒழிப்புதுறை பொது இயக்குநருக்கு புகார் வந்தது.
அதன் பேரில் திருச்சி மின் வாரிய லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் பிரபாகரன் தலைமையிலான போலீஸார் நேற்று கள்ளக்குறிச்சி மின்வாரிய அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் ரியல் எஸ்டேட் பகுதிக்கு மின்இணைப்பு வழங்கப்பட்டதற்கான ஆவ ணங்களையும் 2 மணி நேரத் திற்கும் மேலாக ஆய்வு செய்த னர். இதுதொடர்பாக சில ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துறையினர் எடுத்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago