தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் அறிக்கை: வெளிநாடு சென்று மருத்துவம் பயின்ற மாணவர்களுக்கான மருத்துவ பயிற்சி சேர்க்கை தென்காசி அரசுமருத்துவமனையில் நடைபெறுகிறது. தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் தினமும் 1500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். 500-க்கும் அதிகமான உள்நோயாளிகள் படுக்கை வசதி உள்ளது.
விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பகுதி, தீவிர சிகிச்சைப் பகுதி, இதய சிகிச்சைப் பகுதி, சிறப்பு சிசு சிகிச்சைப் பகுதி, குழந்தைகள் புத்துயிர் மற்றும் அவசரகால சிகிச்சைப் பகுதி, மகப்பேறு மற்றும் மகளிர் நோய் பகுதி, பொதுஅறுவை சிகிச்சைப் பகுதி, சிறுநீரகஅறுவை சிகிச்சைப் பகுதி, பொதுமருத்துவ சிகிச்சைப் பகுதி, எலும்பு முறிவு மற்றும் மூட்டு சிகிச்சைப் பகுதி, காது, மூக்கு, தொண்டை சிகிச்சைப் பகுதி, கண் சிகிச்சைப் பகுதி, தோல் நோய் சிகிச்சைப் பகுதி, பால்வினை நோய் சிகிச்சைப் பகுதி, மனநலசிகிச்சைப் பகுதி, ரத்த சுத்திகரிப்பு சிகிச்சைப் பகுதி, ரத்த வங்கி, தாய்ப்பால் வங்கி என அனைத்து சிகிச்சை வசதிகளையும் கொண்டுள்ளது. எனவே, வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்கள் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவ பயிற்சி எடுத்து பயன்பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago