வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத் தூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 2 கட்டங்களாக 6 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12-ம் தேதி நடைபெற உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில் 7 லட்சத்து 16 ஆயிரத்து 984 வாக்காளர்கள் உள்ளனர். உள்ளாட்சித் தேர்தலையொட்டி வேலூர் மாவட்டத்தில் 1,331 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் பணியில் அரசு அலுவலர்களும் ஆசிரியர்களும் என மொத்தம் 12,100 பேர் ஈடுபடவுள்ளனர். அவர்களின் பெயர்கள் மற்றும் வாக்குப்பதிவு நாளில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடிகள் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நிறைவடைந் துள்ளன.
இதையடுத்து, தேர்தல் நாளில் வாக்குச்சாவடி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த முதற் கட்ட பயிற்சி வகுப்பு கடந்த 24-ம் தேதி வேலூர் மாவட்டத்தில் 7 இடங்களில் நடைபெற்றன. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாதவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பும் நடத்தப்பட்டது.
இந்நிலையில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி வகுப்புகள் நேற்று நடைபெற்றன. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 20 இடங்களில் இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. இதற்காக, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
வேலூர் ஊரீசு கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் விஜயராஜ்குமார் கலந்து கொண்டு முக்கிய ஆலோசனைகளை வழங் கினார்.
ராணிப்பேட்டை மாவட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு 1,410 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. இங்கு, தேர்தல் பணியில் மொத்தம் 11,496 அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர் களுக்கான 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு 7 இடங்களில் நேற்று நடைபெற்றது.ஆற்காடு நகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு, தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்களுக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டம்
அதேபோல, திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 இடங்களில் 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது. திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியில் நடைபெற்ற சிறப்பு வகுப்பில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா கலந்து கொண்டு வாக்குப்பதிவு நாளில் என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார். மேலும், வாக்குச்சாவடி அலுவலர் 1, 1ஏ, 3, 4 மற்றும் 5 ஆகியவர்களுக்கான பணிகள், வாக்குப்பதிவு முடிந்த பிறகு அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.குறிப்பாக, மலைகிராம ஊராட்சிகளில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் தேர்தல் நாளில் மலைகிராமங்களுக்கு சென்று வர சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago