கரோனா விதிகளை பின்பற்றி உள்ளாட்சி தேர்தலை நடத்திட வேண்டும் : தேர்தல் பார்வையாளர் காமராஜ் அறிவுரை

By செய்திப்பிரிவு

ஊரக உள்ளாட்சித் தேர்தல் கரோனா வழிகாட்டுதலின்படி, நடத்திட வேண் டும் என திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் பார்வையாளர் காமராஜ் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற் பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா முன்னிலை வகித்தார். மாவட்ட தேர்தல் பார்வையாளர் காமராஜ் தலைமை வகித்துப் பேசும்போது, "திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. ஊரக பகுதிகளுக்கு அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

முதற் கட்டமாக ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், கந்திலி மற்றும் நாட் றம்பள்ளி ஆகிய 4 ஊராட்சி ஒன்றி யங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்ததாக அக்டோபர் 9-ம் தேதி 2-ம் கட்டமாக ஆலங்காயம் மற்றும் மாதனூர் ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகள், அதில் பதற்றமான சாவடிகளை கண்டறிந்து அங்கு வீடியோ எடுக்க வேண்டும். வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் மைக்ரோ அப்சர் வர்கள் நியமனம் செய்ய வேண்டும்.

அதேபோல, வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும். வாக்குச்சீட்டு அச்சடிப்பது, வாக்குச் சாவடி மையங்களில் தேவையான அடிப் படை வசதிகளை உரிய காலத்தில் செய்து முடிக்க வேண்டும். அனைத்து பணிகளும் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி அமைக்க வேண்டும். மேலும், தேர்தல் நாளின் போது கரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றி தேர்தலை நடத்த வேண்டும்’ என்றார்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண் காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யாபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்