காஞ்சிபுரம் அருகே உள்ள ஏகனாம்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாதிரி வாக்குச் சாவடியை மாணவ, மாணவிகள் அமைத்தனர். அதை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி பார்வையிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக். 6, 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் மக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
காஞ்சிபுரம் அருகே உள்ள ஏகனாம்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணியை ஆட்சியர் மா.ஆர்த்தி தொடங்கி வைத்தார். அந்தப் பள்ளியில் மாணவ, மாணவிகள் மூலம் மாதிரி வாக்குச் சாவடி அமைக்கப்பட்டது. அதில் பொதுமக்கள் பலர் வந்து வாக்களித்து, எவ்வாறு வாக்களிப்பது என்பதை தெரிந்து கொண்டனர். இதை ஆட்சியர் பார்வையிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago