தூத்துக்குடியில் ஆன்லைன் வகுப்புகளில் சிறப்பாக பங்கேற்கும் மாணவ, மாணவியரை பள்ளி ஆசிரியர்கள் வீடு தேடி சென்று சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
கரோனா ஊரடங்கால் பள்ளிகளில் தற்போது 1 முதல் 8-ம் வகுப்புவரை ஆன்லைன் மூலமே பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.தொடர்ந்து வீடுகளிலேயே முடங்கிகிடப்பதால் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் மாணவர்களை வீடு தேடி சென்று பாராட்டும் திட்டத்தை தூத்துக்குடி கமாக் பள்ளி நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.
ஆன்லைன் வகுப்புகளில் முறையாக பங்கேற்று சிறப்பாக கல்வி பயிலும் மாணவ, மாணவி யரின் வீடுகளுக்கு பள்ளி முதல்வர்சோ.ராதா ராஜேஸ்வரி தலைமையில் ஆசிரிய, ஆசிரியைகள் திடீரென சென்று, பெற்றோர் முன்னிலையில் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
கடந்த 2 மாதங்களில் 21 மாணவ, மாணவியரின் இல்லம்தேடிச் சென்று கமாக் கல்விக்குழுவினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். தங்களது வீடுகளுக்கு நேரடியாக வந்த ஆசிரியர்களை பார்த்ததும் மாணவ, மாணவியர் மகிழ்ச்சியடைந்தனர். இந்த திட்டத்துக்கு பெற்றோரும் வரவேற்பு தெரிவித்தனர். இந்த நிகழ்வு தொடர்ந்து நடைபெறும் என்று பள்ளி முதல்வர் தெரிவித்தார்.
கரோனா ஊரடங்கால் பள்ளிகளில் தற்போது 1 முதல் 8-ம் வகுப்பு வரை ஆன்லைன் மூலமே பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago