முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் - கிருஷ்ணகிரியில் கடந்த 3 ஆண்டில் ரூ.50.95 கோடி மதிப்பில் மக்கள் பயன் :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.50 கோடியே 95 லட்சத்து 48 ஆயிரத்து 148 மதிப்பில் பொதுமக்கள் சிகிச்சை பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி மாவட்ட அளவிலான சிறப்பு கூட்டம் நடந்தது. ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். அப்போது 25 நபர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டைகளை வழங்கி ஆட்சியர் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் கடந்த 3 வருடங்களில் சுமார் ரூ.50 கோடியே 95 லட்சத்து 48 ஆயிரத்து 148 மதிப்பில் இலவசமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பயனாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம் என்றார்.

இதனைத் தொடர்ந்து மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் நலப்பணிகள் இணை இயக்குநர் பரமசிவன், திட்ட அலுவலர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்