திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் வாரந்தோறும் சிறப்பு முகாம்கள் மூலம் அதிக எண்ணிக்கையில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதில், கடந்த 3-ம் தேதி நடந்தசிறப்பு முகாமில், 58,141 பேருக்கும், கடந்த 12-ம் தேதி நடைபெற்ற சிறப்பு முகாமில் 1,28,751 பேருக்கும், கடந்த 19-ம் தேதி நடைபெற்ற சிறப்பு முகாமில் 82,556 பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் 913 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இப்பணியை நாரவாரிக்குப்பம் பஸ் நிலையத்தில் பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்றார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருவள்ளுர் சுகாதார மாவட்ட துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) ஜவஹர்லால், பேரூராட்சிகளுக்கான உதவி இயக்குநர் கண்ணன், நாரவாரிக்குப்பம் பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கரன், வட்டார மருத்துவ அலுவலர் ஜோஸ்பின், மாவட்ட பயிற்சி மருத்துவர் தீபலட்சுமி மற்றும் மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
3,652 மருத்துவம் மற்றும் முன்கள பணியாளர்கள் பங்கேற்புடன்மாவட்ட முழுவதும் காலை முதல்,மாலை வரை நடைபெற்ற முகாமில், 1,02,100 பேருக்கு கரோனாதடுப்பூசி செலுத்தப்பட்டது.
மேலும், இதுவரை, 2011-ம்ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பூந்தமல்லி நகராட்சியில் தடுப்பூசி செலுத்த தகுதியுள்ள 49,042 பேரும், திருவேற்காடு நகராட்சியில் கரோனா தடுப்பூசி செலுத்த தகுதியுள்ள 67,654 பேரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
ஆகவே, மாவட்டத்தில் பூந்தமல்லி, திருவேற்காடு ஆகிய இரு நகராட்சிகள், நூறு சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தி இலக்கை அடைந்துள்ளன என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago