சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பையில் சூடான பால் கொடுத்த காபி கடைக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ரூ.5,000 அபராதம் விதித்தனர்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள சில கடைகளில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பயன்படுத்துவதாகவும், தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்வதாகவும் திமுக நகரச் செயலாளர் துரை ஆனந்த் மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதிபாலன், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் பிரபாவதி ஆகியோரிடம் புகார் செய்தார்.
இதையடுத்து நேற்று அங்குள்ள கடைகளை மாவட்ட நியமன அலுவலர் பிரபாவதி தலைமையிலான உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ஒரு கடையில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பையில் சூடான பால் விநியோகிக்கப்பட்டது. இதையடுத்து அக்கடைக்கு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ரூ.5,000 அபராதம் விதித்தனர். மேலும் பாலித்தீன் பைகளையும் பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago