அவரவர் விரும்புகிற நேரத்தில் தேர்தலை நடத்தினால் முறைகேடுக்குத்தான் வழிவகுக்கும் என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தில் காப்பீடு அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தலைமை வகித்தார்.
அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் பயனாளிகளுக்கு காப்பீட்டு அட்டைகளை வழங்கினார். காப்பீட்டுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய சிவகங்கை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன், மருத்துவ இணை இயக்குநர் இளங்கோ மகேஸ்வரன் ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 93,048 பேர் பயன் அடைந்துள்ளனர். இதற்காக ரூ.159.55 கோடி செலவிடப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த நாங்கள் தயாராக இருந்தாலும், வாக்காளர் பட்டியல், வார்டுகள் வரையறை போன்ற சில நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. அவரவர் விரும்புகிற நேரத்தில் தேர்தலை நடத்தினால் முறைகேடுக்குத்தான் வழிவகுக்கும். தற்போது 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. அதன்பிறகு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago