வேலூர் கோட்டை காவலர் பயிற்சி பள்ளியில் - ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகளின் நெகிழ்ச்சியான சந்திப்பு :

வேலூர் கோட்டை காவலர் பயிற்சி பள்ளியில் 35 ஆண்டுகளுக்கு முன்பு உதவி ஆய்வாளர்களாக பயிற்சியில் சேர்ந்தவர்களின் நெகிழ்ச்சி யான சந்திப்பு நடைபெற்றது.

தமிழக காவல் துறையில் கடந்த 1987-ம் ஆண்டு சட்டம்- ஒழுங்கு உதவி ஆய்வாளர்களாக 620-க்கும் அதிகமானோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், 330 பேருக்கு வேலூர் கோட்டை பயிற்சி பள்ளியிலும், சென்னை அசோக் நகரில் சுமார் 290 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிக்குப் பிறகு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற் றியவர்கள், காவல் கண்காணிப் பாளர்கள், துணை காவல் கண் காணிப்பாளர்கள் மற்றும் கூடுதல் காவல் கண்காணிபாளர்கள் வரை பதவியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். தற்போது, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களாக அசோக்குமார், முத்துக்கருப்பன், சுந்தரமூர்த்தி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், 1987-ம் ஆண்டில் உதவி ஆய்வாளர்களாக பயிற்சியில் சேர்ந்து 35ஆண்டுகள் நேற்றுடன் நிறைவு பெற்றதை நினைவு கூறும் வகையில் நெகிழ்ச் சியான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, வேலூர் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் நடைபெற்ற சந்திப்பில் 30-க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற அதிகாரிகள் நேற்று பங்கேற்றனர். அப்போது, தாங்கள் பயின்ற அறைகளுக்குச் சென்று பல்வேறு நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும், தங்களது பணி காலத்தில் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் அவற்றை கையாண்ட விதம் குறித்தும் நண்பர்களுக்கு விளக்கி மகிழ்ச்சியடைந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE