காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு அச்சகத்தில் வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி குறித்து மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி ஆய்வு செய்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரகஉள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கு உண்டான சின்னங்கள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கூட்டுறவு அச்சகத்தில் வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி தொடங்கியுள்ளது.
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர், கிராம ஊராட்சி மன்ற தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என நான்கு வண்ணங்களில் வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி ஆய்வு செய்தார்.
வாக்குச் சீட்டு அச்சடிக்கும் இடத்தில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் தீ விபத்து மற்றும் பேரிடர்களை தவிர்க்க தீயணைப்புத் துறை வாகனம் நிறுத்தப்பட்டு ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago