இரு கட்டங்களாக நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10,715 பேரும், விழுப்புரம் மாவட்டத்தில் 19,982 பேரும் போட்டியிடுகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 3,773 பதவியிடங்களுக்கு மொத்தம் 13,957 வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதில் 224 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 2531 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டது. இதுபோக கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 29 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 453 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேரும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேர் என மொத்தம் 487 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தத்தில் போட்டியாளர்களாக 10,715 பேர் களத்தில் உள்ளனர்.
இதேபோன்று விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 6,097 பதவியிடங்களூக்கு 24,194 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். இதில் 141 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.3,692 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டது. கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 22 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 357 பேரும் என மொத்தம் 379 பேர் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், 3 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்குமனு தாக்கல் ஏதும் செய்யப்படவில்லை. இதனடிப் படையில் மீதமுள்ள 5,715 பதவி இடங்களுக்கு 19,982 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 22 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 357 பேரும் என மொத்தம் 379 பேர் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago