உரம் பதுக்கல், கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் - உரம் கண்காணிப்புப் பிரிவில் புகார் தெரிவிக்கலாம் : கடலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் தகவல்

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் உரம் பதுக்கல், கூடுதல் விலைக்கு விற்பனை போன்றவற்றை தடுக்கமாவட்ட வேளாண்மை அலுவலகத் தில் உரக் கண்காணிப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கடலூர் மாவட்டவேளாண் இணை இயக்குநர் பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடலூர் மாவட்டத்தில் 317 தனியார் விற்பனையகங்கள் மற்றும்167 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க விற்பனை யகங்கள் மூலம் பல்வேறு வகையான உரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் யூரியா உரங்கள் சரிவர கிடைப்பதில்லை.உரத்தட்டுப்பாடு இருக்கும் சமயங்களில் சில கடைகளில் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்கப்படுவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தில் உரம் கண்காணிப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவு புகார்களின் அடிப்படையிலான துரித நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு செயல்பட்டு வருகின்றது. தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை இப்பிரிவு இயங்கும். அனைத்து வகை உரங்களின் விற்பனை, விநியோகம் போன்றவற்றில் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக விவசாயிகள் நேரிலோ, தொலை பேசி மூலமா கவோ இப்பிரிவினை தொடர்பு கொண்டு தீர்வு காணலாம்.

வேளாண் இணை இயக்குநர் தலைமையில் இப்பிரிவு செயல்படும். தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் வட்டார வேளாண் உதவி இயக்குநர்கள் இப்பிரிவில் இருப்பர். உரம் பதுக்கல், கூடுதல் விலைக்கு உரம் விற்பனை, உரத்தட்டுப்பாடு, உரம் கிடைப்பதில் தாமதம் போன்ற உரம் சார்ந்த புகார்களை விவசாயிகள் இப்பிரிவில் தெரிவிக்கலாம். மேலும் யூரியா மற்றும் இதர உரங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டாலோ அல்லது விவசாயியின் விருப்பத்திற்கு மாறாக இதர இடுபொருட்களை வாங்கும்படி விவசாயிகள் வற்புறுத்தப்பட்டாலோ உரிய ஆதாரங்களோடு தங்கள் பகுதி வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது கடலூர் வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தை 04142-290658 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு வேளாண்மை உதவி இயக்குநரை 9087157057 என்ற எண்ணிலும், தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு வேளாண்மை அலுவலரை 8754386163 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

வேளாண்மை உதவி இயக்குநரை 9087157057 என்ற எண்ணிலும், தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு வேளாண்மை அலுவலரை 8754386163 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்