சிதம்பரத்தில் - காது கேளாதோர் வார விழிப்புணர்வு பேரணி :

By செய்திப்பிரிவு

சிதம்பரத்தில் சர்வதேச காது கேளாதோர் வார விழிப்புணர்வு பேரணி நடந்தது.

காது கேளாதோர்க்கென தனி சமூகங்கள், கலாச்சாரங்கள், மொழிகள், சைகை மொழிகள் உள்ளன என்பதை அங்கீகரிக்கவும் மற்றும் அவர்களின் உரிமைகளை விளக்கவும், சமூக ஒற்றுமையை ஊக்குவிக்கவும் சர்வதேச காது கேளாதோர் வாரம் செப்டம்பர் மாத இறுதியில் கொண்டாடப் படுகிறது. இந்த வருடத்திற்கான மையப் பொருளானது காது கேளாதோர் சமூகங்களை கொண்டாடுவது ஆகும்.

இதன்படி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை துறை சார்பாக சர்வதேச காது கேளாதோர் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி நேற்று விழிப்புணர்வு பேரணி நடந்தது. மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் லாவண்யாகுமாரி, துறைத்தலைவர் மருத்துவர் பாலாஜி சுவாமிநாதன், துறை பேராசிரியர் மருத்துவர் சண்முகம் ஆகியோர் முன்னிலையில் பல்கலைக்கழக பதிவாளர் ஞனாதேவன், சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ் ராஜ் ஆகியோர் கொடியசைத்து பேரணியை தொடக்கி வைத்தனர். இப்பேரணியில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். இப்பேரணியில் காது கேளாதோர்க்கான சைகை மொழிகள், உரிமைகள், தடுப்பு முறைகள் மற்றும் அரசின் உதவிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்