தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 26 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு ள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள ஆழ்வார்கற்குளம், மூலக்கரை, வாலசமுத்திரம், கொல்லம் பரும்பு, வேலிடுபட்டி, வெம்பூர், சின்னவநாயக்கன்பட்டி ஆகிய 7 ஊராட்சி தலைவர் பதவிக ளுக்கும், மாவட்டம் முழுவதும் காலியாக உள்ள 41 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் வரும் அக்டோபர் 9-ம் தேதி நடைபெறுகிறது.
48 பதவிகளுக்கு மொத்தம் 110 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. இதில் 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தொடர்ந்து மனுக்களை வாபஸ் பெற நேற்று முன்தினம் வரை அவகாசம் வழங்கப்பட்டது. இதில் 23 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் மாவட்டத்தில் காலியாக உள்ள 48 பதவிகளில் ஒரு ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட 26 பதவிகளுக்கு மனுதாக்கல் செய்தவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதுதவிர 6 ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு 16 பேர், 16 உறுப்பினர் பதவிகளுக்கு 43 பேர் என மொத்தம் 59 பேர் போட்டியிடு கின்றனர். இந்த பதவிகளுக்கான வாக்குப்பதிவு 9.10.2021 அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 12.10.2021 அன்று நடைபெறுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago