திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் மன்னார்குடியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, அதிமுக மாவட்டச் செயலாளர் ஆர்.காமராஜ் எம்எல்ஏ தலைமை வகித்தார். இதில், மாவட்ட ஊராட்சி 11-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் குருபரன், மூவாநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ரவி ஆகியோரை அறிமுகம் செய்துவைத்து எம்எல்ஏ ஆர்.காமராஜ் பேசியது:
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு சேவை செய்கின்ற கட்சி அதிமுக என்பதை அனைவரும் உணர்வர். எனவே, அதிமுகவில் பணியாற்றும் செயல்வீரர்கள் அனைவரும் தொய்வின்றி வாக்காளர்களை சந்தித்து, அதிமுக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் வெற்றிபெற பாடுபட வேண்டும் என்றார்.
கூட்டத்தில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் சிவா.ராஜமாணிக்கம், கூட்டுறவு பால் வழங்கும் சங்கத் தலைவர் எம்.கே.கலியபெருமாள், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பொன்.வாசுகிராமன், மன்னார்குடி ஒன்றியக் குழுத் தலைவர் மனோகரன், ஒன்றியச் செயலாளர் தமிழ்ச்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago