திருவாரூர் மாவட்டத்தில் - 302 இடங்களில் இன்று சாலை, ரயில் மறியல் :

By செய்திப்பிரிவு

திருவாரூரில், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்டத் தலைவர் பி.எஸ்.மாசிலாமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள், மதிமுக கூடூர் சீனிவாசன், மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கூறியது:

இந்தியாவில் விவசாயத்தையும், விவசாயிகளையும் கார்ப்பரேட் கம்பெனிகளின் வசம் ஒப்படைக்கும் நோக்கத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் கண்டித்து டெல்லியில் விவசாயிகள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை எனவே, விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் செப்.27-ம் தேதி (இன்று) பொது வேலைநிறுத்தம், சாலை, ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற உள்ளன. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் 300 இடங்களில் சாலை மறியல் மற்றும் நீடாமங்கலம், சிங்களஞ்சேரி ஆகிய இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இப்போராட்டத்துக்கு வர்த்தகர்கள் கடைகளை அடைத்து ஆதரவு தர வேண்டும். அனைத்து வகையான வாகனங்களையும் இயக்காமல் பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்