கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்: மக்கள் ஆர்வம் :

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் மூன்றாவது முறையாக கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் மாநகராட்சி பகுதிகளில் 100 மையங்கள் உட்பட மொத்தம் 435 மையங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய முகாமில் ஏராளமானோர் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தடுப்பூசி பணியாளர்கள் 435 பேர், 11 மேற்பார்வையாளர்கள் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகா தார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகள் என, 411 மையங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடை பெற்றன. பொதுமக்கள் தங்களது ஆதார் எண், தொலைபேசி எண்ணை வழங்கி தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்பைச் சேர்ந்த பணியாளர்கள், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்களுக்கு பிரத்யேகமான முறையில் டோக்கன் வழங்கப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 605 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில், தூத்துக்குடி சுகாதார மாவட்டத்தில் 289 இடங்களிலும், 134 நடமாடும் குழுக்கள் மூலம் 423 இடங்களிலும், கோவில்பட்டி சுகாதார மாவட்டத்தில் 182 இடங்களிலும், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மட்டும் 87 இடங்களிலும் தடுப்பூசி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாநகராட்சி பகுதிகளில் நடை பெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை ஆணையர் தி.சாரு பார்வையிட்டார்.

மாநகர நல அலுவலர் வித்யா உள்ளிட்ட அலு வலர்கள் உடனிருந்தனர். அனை த்து இடங்களிலும் 18 வயதுக்கு மேற்பட்டோர் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று 3-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனி மினி கிளினிக், வல்லன்குமாரவிளை அரசு தொடக்கப்பள்ளி, வடலிவிளை அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற முகாமை மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறும்போது, “கன்னியாகுமரி மாவட்டத்தில் தடுப்பூசி முகாம் 510 மையங்களில் நடக்கிறது. சுமார் 1 லட்சம் தடுப்பூசி இருப்பில் உள்ளது. ஒவ்வொரு மையத்துக்கும் 200 டோஸ் என்ற அளவில் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்