ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் - ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு 981 பேர் போட்டியின்றி தேர்வு : களத்தில் 18,917 வேட்பாளர்கள்

By செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 7,251 ஊரக உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கு 981 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். களத்தில் 18,917 பேர் போட்டியிட உள்ளனர்.

தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கான தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி மற்றும் 9-ம் தேதி என 2 கட்டகளாக நடைபெற உள்ளன.

அதன்படி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 7,251 உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கான தேர்தலில் 23,659 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதில், 981 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிலரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. சிலர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இறுதியாக, வேலூர் மாவட்டத்தில் 6,547 பேரும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6,085 பேரும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 6,285 பேரும் என மொத்தம் 18,917 பேர் தேர்தலில் போட்டியிட உள்ளனர்.

வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டத்தில் 2,478 உள்ளாட்சி அமைப்பு பதவிகள் உள்ளன. இந்த பதவிகளுக்கு 8,170 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். அதில், தள்ளுபடி, வாபஸ், போட்டியின்றி தேர்வு போக இறுதியாக 6,547 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

14 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 93 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில், தள்ளுபடி, வாபஸ், போட்டியின்றி தேர்வு போக இறுதியாக 503 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

247 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 1,192 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில், தள்ளுபடி, வாபஸ், போட்டியின்றி தேர்வு போக இறுதியாக 820 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் 2,079 பதவிக்கு 6,144 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில், தள்ளுபடி, வாபஸ், போட்டியின்றி தேர்வு போக இறுதியாக 640 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2,648 உள்ளாட்சி அமைப்பு பதவிகள் உள்ளன. இந்த பதவிகளுக்கு 7,651 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். அதில், தள்ளுபடி, வாபஸ், போட்டியின்றி தேர்வு போக இறுதியாக 6,085 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

13 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 95 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில், தள்ளுபடி, வாபஸ் போக இறுதியாக 68 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

127 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 684 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில், தள்ளுபடி, வாபஸ் போக இறுதியாக 508 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

288 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 1,247 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில், தள்ளுபடி, வாபஸ், போட்டியின்றி தேர்வு போக இறுதியாக 879 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் 2,220 பதவிக்கு 5,625 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில், தள்ளுபடி, வாபஸ், போட்டியின்றி தேர்வு போக இறுதியாக 4,630 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 2,125 உள்ளாட்சி அமைப்பு பதவிகள்உள்ளன. இந்த பதவிகளுக்கு 7,838 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். அதில், தள்ளுபடி, வாபஸ், போட்டியின்றி தேர்வு போக இறுதியாக 6,285 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

13 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 104 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில், தள்ளுபடி, வாபஸ் போக இறுதியாக 74 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

125 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 679 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். 5 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 193 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். 481 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

208 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 1,118 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில் 17 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 336 பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். 3 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 782 பேர் தேர்தலில் போட்டி யிடுகின்றனர்.

ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் 1,779 பதவிக்கு 5,937 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில் 83 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 710 பேர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர். 176 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 4,968 பேர் தேர்தலில் போட்டி யிடுகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்