சுங்கச்சாவடிகளை அகற்றாவிட் டால் புதுடெல்லியில் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா தெரிவித்தார்.
காட்பாடியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகி களுக்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வணிகர் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘மாநகராட்சி வளர்ச்சிப்பணிகளுக்கான பல்வேறு இடங்களில் இடிக்கப்படும் கடைகளுக்கு முதலில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் வணிகர்களிடம் அதிகாரத்தை காட்டுவது அவசியமற்றது.கோயில் நிலத்தில் உள்ள கடைகளை அரசு முறைபடுத்தி வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் வெளிப்படை தன்மை வேண்டும்.
குறிப்பாக, அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்ற வேண்டும். இது தொடர்பாக ஏற்கெனவே புதுடெல்லியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு எங்களது கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் புதுடெல்லிக்கே சென்று போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago