மோகனூர் அருகே மாடகாசம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ராசாம் பாளையம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட 28 குடிசைகளை வருவாய்த் துறை யினர் அகற்றும் பணியை மேற்கொண்டனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரி வித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். இதில், நகராட்சி மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல காவல் துறையினர் அனுமதிக்கவில்லை. இதனால் மக்கள் நாமக்கல்- துறையூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். நாமக்கல் கோட்டாட்சியர் மஞ்சுளா அவர்களை சமரசம் செய்தார்.
இதனிடையே மக்களிடம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். குடிசைகள் அகற்றப்பட்ட இடத்திலேயே வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.விதிமுறைப்படி விசாரணை நடத்தி தகுதியானவர்களுக்கு ஒரு மாதத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்தார். இதையடுத்து மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்கள் விடுவிக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago