பையூரில் தற்காலிகமாக - தோட்டக்கலை கல்லூரி தொடங்க முன்னேற்பாடுகளை ஆட்சியர் ஆய்வு :

கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் ஜீனூர் தோட்டக்கலை கல்லூரி தற்காலிகமாக தொடங்குவதவற்கான முன்னேற்பாடு பணிகளை ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூரில் 150 ஏக்கர் பரப்பளவில் புதிய தோட்டக்கலைக் கல்லூரி தொடங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின், சட்டப் பேரவையில் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நிகழாண்டில் 40 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதியும், ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. ஜீனூரில் கட்டுமான பணிகள் முடியும் வரை, தோட்டக்கலைக் கல்லூரி தற்காலிகமாக பையூர் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இக்கல்லூரியில் வருகிற நவம்பர் மாதம் முதல் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

கல்லூரி செயல்படுவதற்கு தேவையான நிர்வாக அலுவலகம், வகுப்பறை, ஆய்வுக் கூடங்கள், உணவுக் கூடம், மாணவ, மாணவியர் தங்கும் விடுதி, கழிப்பறை, குடிநீர் வசதிகள் மற்றும் கல்லூரிக்கு தேவையான தளவாடங்கள் குறித்து ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டார்.

அப்போது, தற்காலிகமாக கல்லூரி செயல்படுவதற்கு தேவையான உபகரணங்கள், அடிப்படை வசதிகள் மற்றும் கழிப்பறை வசதிகள் விரைவில் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

ஆய்வின் போது, தோட்டக்கலை கல்லூரி நிர்வாக அலுவலர் ஜீவஜோதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி, பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர் பரசுராமன் மற்றும் பேராசிரியர்கள் உடனி ருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE