காஞ்சியில் நடைபெற்ற சுதந்திர ஓட்டம் 2.0-ல் - உள்ளாட்சி தேர்தல் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் :

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நடைபெற்ற சுதந்திர ஓட்டம் 2.0-ல் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

இந்த சுதந்தர ஓட்டத்தை நேரு யுவகேந்திரா, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை ஒருங்கிணைந்து நடத்தின. மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அனைத்து மக்களும் குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சிக்கென நேரம் ஒதுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த சுதந்திர ஓட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றவர்கள் சுமார் 3 கிமீ தூரம் ஓடினர். காஞ்சிபுரம் மாவட்ட அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கிய ஓட்டம்ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது.

இந்த ஓட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த ஓட்டத்தில் உடற்பயிற்சியின் அவசியம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் விரைவில் நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் துண்டுப் பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

இந்த ஓட்டத்தில் பங்கு பெற்றுமுதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள்மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) ஜி.சீனுவாசராவ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் எஸ்.ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்