திண்டிவனம் அருகே காரை வழிமறித்து - ரூ.30 லட்சம் கொள்ளையில் மேலும் 2 பேர் கைது :

By செய்திப்பிரிவு

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே சார்வாய்புதூரைச் சேர்ந்த வர் ராஜா (30). இவர் அதே பகுதியில் ஊறுகாய் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 15-ம் தேதி இவரும், அவருடன் காசாளராக பணியாற்றி வரும் சிபிசக்கரவர்த்தியும் (28) காரில் திண்டிவனத்தை அடுத்த பெருமுக்கல் பேருந்து நிறுத்தம் அருகே வந்தனர். அப்போது பின்னால் பைக்கில் வந்த ஒரு கும்பல் காரை திடீரென வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ராஜாவிடம் இருந்து ரூ.30 லட்சத்தை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றது.

இதுகுறித்து பிரம்மதேசம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த ஊறுகாய் கம்பெனியில் பணியாற்றி பணி நீக்கம் செய்யப்பட்ட அதே பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (25), மணிகண்டன் (20), தற் போது ஊறுகாய் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வரும் மனோஜ்குமார் (27) மற்றும் சென்னை ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வரும் சென்னை புதுப்பேட்டை சாமி தெருவை சேர்ந்த செல்வக்குமார் (46) ஆகியோரை கடந்த 18-ம் தேதி போலீஸார் கைது கைது செய்தனர். அவர்களிடமிருந்த ரூ.9 லட்சத்தையும் மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கூலிப்படை தலைவனான திலீப் மற்றும் அவரது கூட்டாளியான சென்னை முகலிவாக்கம் பகுதியைச் சேர்ந்த அஜில்குமார் (19) ஆகியஇருவரையும் தனிப்படை போலீ ஸார் சென்னையில் கைது செய்துநேற்று முன்தினம் பிரம்ம தேசத்திற்கு அழைத்து வந்தனர்.

திலீப்பிடம் இருந்த ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கம், ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள பைக் மற்றும் அஜில்குமாரிடம் இருந்த ரூ.70 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய கூலிப்படையை சேர்ந்த மேலும் 4 பேரை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர். கைதான திலீப் மீது ஆவடி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன என காவல் துறையினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்