மத்திய கிழக்கு மற்றும் வடமேற்கு வங்க கடலில் உருவானகாற்றழுத்த தாழ்வு நிலை, வலுவடைந்து கலிங்கப்பட்டினத் திற்கு சுமார் 740 கிலோ மீட்டர்தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டு உள்ளது. இது மேலும் வலு வடைந்து, வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலம் இடையே இன்று (செப்.26) காலை கரைகடக்கும். இதன் காரணமாக கடலூர், புதுச்சேரி துறைமுகங் களில் 1-ம் எண் புயல் எச் சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டத்தில் ஏற்கெனவே வளிமண்டல சுழற்சிமற்றும் வெப்பச்சலனம் காரண மாக கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago