ஏற்றுமதிக்கு வழிகாட்டும் கருத்தரங்கம் தேனியில் நடந்தது. ஆட்சியர் க.வீ.முரளிதரன் தலைமை வகித்தார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்.தண்டபாணி, மாவட்ட தொழில் மையப் பொதுமேலாளர் எல்.ராமசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆட்சியர் பேசுகையில், தேனி மாவட்டத்தில் இருந்து அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பருத்தி நூல், மெத்தை, தலையணைகள், உறைகள், காட்டன் சாக்ஸ், கயிறு பிளாக்குகள், மசாலா பொடி, வாசனைப் பொருட்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இதன் மூலம் தேனி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.1,500 கோடி அந்நிய செலாவணி கிடைக்கிறது. விவசாய விளைபொருட் களையும் மதிப்பு கூட்டி சர்வதேச அளவில் சந்தைப்படுத்த வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago