உள்ளாட்சி தேர்தலில் தபால் வாக்கு செலுத்தும் முறை விளக்கம் :

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கூட்டணியின் மாவட்டச் செயலாளரும், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான செ.பால்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உள்ளாட்சி முதற்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற தேர்தல் அலுவலர்களுக்கு தபால் வாக்கு பெறுவதற்கான படிவம்- 15 வழங்கப்பட்டிருக்கும். தேர்தல் பயிற்சிக்கான ஆணையுடன் படிவம் - 15 ஐ 4 நகல் எடுத்து, அதில் வீட்டு முகவரி விவரங்கள் தெளிவாக எழுதி, சட்டப்பேரவை தொகுதி எண் மற்றும் பெயர், வார்டு எண் மற்றும் பாகம் எண்,வரிசை எண் எழுதி இறுதியில் கையொப்பம் இடவேண்டும். தேர்தல் பணிக்கானபயிற்சி ஆணை நகலுடன், வாக்காளர்அடையாள அட்டையின் நகல் சேர்த்து எந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்கு உள்ளதோ ( BDO office ) அந்தஅலுவலகத்தில் அக்டோபர் 2-ம் தேதி வரைதபால் வாக்கு பெற விண்ணப்ப படிவம் வழங்கலாம். 2-வது பயிற்சி வகுப்பிலும் ஒப்படைக்கலாம்.

சொந்த வார்டில் பணியாற்றினால் தேர்தல் பணிச் சான்று EDC (Election Duty Certificate) பெற்று தாங்கள் பணிபுரியும் வாக்குச்சாவடியில் வாக்களிக்கலாம். இதுவரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் படிவம்- 15 கொடுக்காதவர்கள் இரண்டாவது பயிற்சி வகுப்புக்கு செல்லும்போதுவாக்காளர் அடையாள அட்டை நகல், தேர்தல் பயிற்சி ஆணை நகல், படிவம் -15(4 நகல்) ஆகியவற்றை எடுத்துச் செல்லவேண்டும். இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE