சேரன்மகாதேவியில் 106 மி.மீ. மழை :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 106 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இதுபோல மணிமுத்தாறு அணைப்பகுதியில் 3.4 மி.மீ., அம்பாசமுத்திரத்தில் 5 மி.மீ. மழை பெய்துள்ளது. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 78.75 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 585 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 705 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 118 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 62.90 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 50 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணை மூடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை இல்லாததால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தென்மேற்கு பருவக்காற்றும் அனல் காற்றாக வீசுகிறது.

நேற்று முன்தினம் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் அடவிநயினார் அணையில் 20 மி.மீ., கருப்பாநதி அணையில் 3.50 மி.மீ. மழை பதிவானது.

மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவியது. நேற்று பகலிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது. மற்ற அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

கடனாநதி அணை நீர்மட்டம் 65 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 62.75 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 54.14 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 121.75 அடியாகவும் இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்