திருநெல்வேலி மாவட்டத்தில் 2,069 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 15-ம் தேதி தொடங்கி, 22-ம் தேதி வரை 6,871 பேர் வேட்புமனு தாக்கல்செய்தனர். நேற்று சில வேட்புமனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. இதைத் தொடர்ந்து மாலையில் இறுதி வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கும் பணி குலுக்கல் முறையில் நடைபெற்றது.
பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 7-வது வார்டான மேலபுத்தநேரியில் திமுக, அதிமுக,அமமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சைகள் உட்பட 8 பேர் போட்டியிடுகின்றனர். இதில் திமுக வேட்பாளர் பகவதிக்கு ஆதரவாக அதிமுக, நாம் தமிழர் கட்சி, சுயேச்சை வேட்பாளர்கள் என, 6 பேர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர்.
ஆனால், சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த நாகமணி என்பவர் மனுவை வாபஸ் பெறவில்லை. மனு வாபஸ் பெறுவதற்கான நேரம் முடிவடைந்தபின் சின்னம் பெறுவதற்காக அவரும், அவருக்கு ஆதரவான அதிமுகவினரும் அங்கு வந்தனர். அப்போது திமுக மற்றும் அதிமுக ஆதரவாளர்களிடையே தள்ளுமுள்ளு மற்றும் மோதல் ஏற்பட்டது. அங்கிருந்த போலீஸார் மோதலில் ஈடுபட்டவர்களை விலக்கி வெளியே அனுப்பினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago