திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் பா.விஷ்ணு சந்திரன் அறிக்கை: திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்துக்கு உட்பட்ட வாராந்திர கால்நடை சந்தையில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும், அதனை பராமரிக்கவும் மாநகராட்சிக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. அதனை ஈடுசெய்யும் பொருட்டு, மாநகராட்சியின் வருவாயை பெருக்கும் வகையில் வாராந்திர சந்தையின் பல்வேறு இனங்களுக்கான நுழைவு கட்டணங்களை வரும் 1.10.2021 முதல்உயர்வு செய்து திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி காளை மாடு, எருமை கிடா ஒன்றுக்கு ரூ.40 லிருந்து ரூ.100-ஆகவும், ஆடு ஒன்றுக்கு ரூ.20-லிருந்து ரூ.50-ஆகவும், லாரி ஒன்றுக்கு ஒரு முறைக்கு ரூ.25-லிருந்து ரூ.100-ஆகவும், ஆட்டோ ஒன்றுக்கு ஒரு முறைக்கு ரூ.25- லிருந்து ரூ.50-ஆகவும், கோழி ஒன்றுக்கு ரூ.5-லிருந்து ரூ.25-ஆகவும், கருவாடு கூடை கட்டு ரூ.5-லிருந்து ரூ.50-ஆகவும், தரகு கட்டணம் (தரகர் ஒருவருக்கு ) ரூ.25-லிருந்து ரூ.50 எனவும் திருத்திய கட்டணம் செலுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago