யோகா போட்டியில் தங்கம் வென்ற ஈரோடு மாணவருக்கு உற்சாக வரவேற்பு :

ஈரோடு: நேபாள நாட்டின் பொக்காரோ நகரில் கடந்த 14-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை அந்நாட்டின் (அரசு சாரா) விளையாட்டு அமைப்பான பி.சி.அகாடமி (பொக்காரோ) மற்றும் இந்திய நாட்டின் (அரசு சாரா) விளையாட்டு அமைப்பான ‘யூத் ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் அசோசியேஷன் ஆப் இந்தியா’ ஆகிய அமைப்புகள் இணைந்து சர்வதேச அளவிலான சிலம்பம், குத்துச்சண்டை, மல்யுத்தம், கைப்பந்து, கூடைப்பந்து, ஓட்டப்பந்தயம், யோகா உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தின. இப்போட்டியில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான யோகா போட்டியில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஆர்.முருகேசன் - மகேஷ்வரி தம்பதியின் மகன், மு.கார்க்கி பங்கேற்றார். இப்போட்டியில், அதிக புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்ற கார்க்கிக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

இப்போட்டியில் ஒட்டுமொத்த விளையாட்டுகளின் சாம்பியன்சிப் வெற்றிக் கோப்பையையும் இந்திய அணியே வென்றுள்ளது. தங்கப்பதக்கம் பெற்று ஈரோடு திரும்பிய கார்க்கி, பயிற்சியாளர் தீபிகா, யோகா வீரர்கள் கவின்ராஜ், முகேஸ் மற்றும் ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் உள்ளிட்டோருக்கு ஈரோடு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தங்கப்பதக்கம் வென்ற கார்க்கி, ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மாணவராவார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE